மத்திய மாகாணத்தின் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு உள்வாங்குவது, கடந்த இரு வருடங்களுக்கு அதிகமான காலம் இழுபறி நிலையில் உள்ளது. அவர்களின் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சர் உட்பட அனைத்து அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கும் நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பல தடவைகள் இப்பிரச்சினையை சுட்டிக்காட்டி இருக்கின்றோம். அதனடிப்படையில் கடந்த 15 ஆம் திகதி, 306 பேருக்கான நியமங்கள் வழங்குவதற்குரிய கடிதம் அனுப்பப்பட்டது.
எனினும், அரச தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகளின் தலையீட்டால் மீண்டும் இந்நியமனம் வழங்கல் பிற்போடப்பட்டிருக்கின்றது என்றார்.
தமது அரசியல் வங்குரோத்து நிலையை மூடி மறைப்பதற்கு இந்நியமனத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்தும் செயற்பாடே இதுவாகும். தகைமைகளை பூர்த்திசெய்த மலையக ஆசிரிய உதவியாளர்களே, ஆசிரிய சேவைக்கான நியமனத்தை கோருகின்றனர். அதற்கு யாருடைய காலடியிலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
2015 ஆம் ஆண்டு, அமைச்சரவை தீர்மானத்தின் படி, மலையக தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. அதன் போது, மாதமொன்றுக்கான கொடுப்பனவு ரூபாய் 6,000 மட்டுமே வழங்கப்பட்டது.
அதன் பின்னர் அத்தொகை ரூபாய் 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆசிரிய உதவியாளர்கள் தமது பயிற்சிகளை பூர்த்திசெய்து, தகைமைகளை முழுமைப்படுத்துகின்ற போது, உடன் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படல் வேண்டும் என்றார்.
அதன் அடிப்படையில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் சேவை நியமனம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு காலதாமதமான காலத்திற்குரிய நிலுவை கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் ஒரு பகுதியினருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கான நிலுவை கொடுப்பனவு எதுவும் இதுவரையும் வழங்கப்படவில்லை.
அது மட்டுமன்றி எஞ்சியுள்ள நியமனங்கள் இதுவரையும் வழங்கப்படவில்லை. இன்று ஆசிரிய உதவியாளர்கள் தமது நியமனத்தை பெறுவதற்கு வீதிகளில் இறங்க வேண்டிய நிலைமையை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.
Post a Comment