மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம்

ADMIN
0


மண், மணல் மற்றும் கல் ஆகியவற்றை அகழ்வதற்கும் கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.




இதற்கமைய, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு வருகைதந்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென அதன் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.




நாடளாவிய ரீதியிலுள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் கிளை அலுவலகங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top