உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிப்பு!
December 30, 2021
0
” இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பால்மாவின் விலையும் நிச்சயம் அதிகரிக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் டி பி ஹேரத் தெரிவித்தார்.
” உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்துள்ளது. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையும் இங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கு தேசிய பால்மா விலையும் அதிகரிக்கப்படும்.
400 கிராம் தேசிய பால்மா 20 ரூபாவால் அதிகரிக்கப்படும். ஒரு கிலோ பால்மாவின் விலையும் உயர்த்தப்படும்.” – என்றும் அவர் கூறினார்.
Share to other apps