பஸ் கட்டண திருத்தங்கள் தொடர்பான அறிக்கை இன்று போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எரிபொருள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள், தினசரி, மாதாந்த மற்றும் வருடாந்த பராமரிப்பு, பணியாளர் சம்பளம் மற்றும் காப்புறுதி உட்பட 12 தரவுகள் அடிப்படையில் திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களை இன்று (28) அல்லது நாளை (29) திகதிக்குள் அறிவிப்பதற்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினாலும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினாலும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருள் சலுகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் 25 ரூபாய்க்கு பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும் தனியார் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ளன.
Post a Comment