Top News

டொலர் இல்லை; பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளன: விலை உயரலாம்


அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் கடுமையான டொலர் நெருக்கடியே இதற்குக் காரணம்.
இந்த கொள்கலன்களில் சுமார் 30,000 மெட்றிக் தொன் அத்தியா வசிய பொருட்கள் இருப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அத்தியாவசிய உணவு கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்காவிட்டால் , நாட்டில் பொருட்களின் விலை வேகமாக உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மாவைத் தவிர ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 110 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு செலவாகிறமை தெரிய வந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post