பால் மா விலையை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என்பதை இன்று நள்ளிரவு அறிவிக்கப்படும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒரு கிலோ பால்மா, 945 ரூபாவில் இருந்து 1195 ரூபாவிற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அதிகரிக்கப்பட்டிருந்தது.
எனினும், அண்மைக்காலமாக பால்மாவிற்கு சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வெளிநாட்டு டொலர் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இறக்குமதிப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அனைத்துப் பொருட்களின் விலையும் கணசமாக அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment