காலி, பெலிகஹா பகுதியில் உள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக (28) மக்கள் நீண்ட வரிசையில் இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியில் வதந்திகள் பரவிய நிலையில், நுகர்வோர் அரிசியை கொள்வனவு செய்வதற்கான முண்டியடித்துக்கொண்டு குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் குவிந்துள்ளனா்.
இந்நிலைமை காரணமாக மொத்த வியாபாரிகளினால் வர்த்தகர்களுக்கு குறைந்தளவிலான அரிசி மாத்திரமே வழங்கப்பட்டு வந்ததுடன், விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு 5 கிலோ அரிசி குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தையில் அனைத்துப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால், அரிசி விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment