இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை உலகின் அதிநவீன தொழில்நுட்பமாக மாற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் இன்று (28) கொழும்பில் ஆரம்பிக்கப்படுகிறது.
பழமையான தொழில்நுட்பத்திலிருந்து(Analog) இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமையை நவீன டிஜிட்டல் முறைக்கு (Digital) மாற்றியமைப்பதற்கான இந்த திட்டத்தின் ஆரம்ப விழா இன்று (28) மாலை 7.00 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்து கொள்கின்றார்.
ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விசேட நிதியுதவியின் கீழ் இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் நேயர்களுக்கு சலுகைகளையும் நன்மைகளையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment