திருகோணமலையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்

ADMIN
0


(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை லிங்கநகர் முருகன் கோவில் 24ஆம் ஒழுங்கை சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (30) பிற்பகல் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவம் இன்று சமைத்து கொண்டிருக்கும் போது இல்லத்தரசியும் அவரது கணவரும் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது இவ் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவ் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தின் போது கணவர் அருகில் இருந்தமையினால் தீ கட்டுப்படுத்த பட்டதாகவும் பாதிக்க பட்ட இல்லத்தரசி தெரிவித்தார்.

சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top