வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் லங்கா சதொச நிறுவனம் புதிய தண்ணீர் போத்தல் ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து பந்துல குணவர்தன தெரிவிக்கையில்.
நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களையும் இணைக்கும் விதமாக லங்கா சதொச நிறுவனம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. குடிநீர் போத்தல் ஒன்று 35 ரூபாய் என்றும் வெற்று போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
அத்தோடு, இந்த முயற்சியின் மூலம் நாடு முழுவதும் குறைந்த விலையில் குடிநீர் போத்தல்கள் கிடைப்பதுடன், சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதற்கும் பங்களிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
“இதன் மூலம், மற்ற குடிநீர் போத்தல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சவால் விட நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்களும் இந்த போத்தல்களை மீட்டெடுக்கும் முறையைப் பயன்படுத்தினால், அது சூழலுக்கு உகந்த வணிகமாக மாறும்” என்றார்.
Post a Comment