Top News

12 மாவட்டங்களுக்கு டெங்கு அபாயம்...


தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு 12 மாவட்டங்கள் டெங்கு அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.


இவ்வாறு 81 சுகாதார மருத்துவ உத்தியோகத்தர்கள் ஆளுகை பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு அபாயமான பகுதிகளாக குறிப்பிடப்படுவதுடன், ஜனவரி மாதத்தில் மாத்திரம் 7000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post