15 ஆயிரம் கொரோனா மரணங்களை கடந்தது இலங்கை!
January 02, 2022
0
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதில் 20 ஆண்களும் 04 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15,019 ஆக அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 11 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share to other apps