Top News

பச்சை மிளகாய் 1,500 ரூபாய் வரை விற்பனை



கம்பஹா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் மிக அதிகமாக உள்ளது.



குறிப்பாக ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று (2) 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காய்கறிகளின் தட்டுப்பாட்டால் விலை அதிகரித்தாலும், வியாபாரிகள் தமது இஷ்டத்திற்கு விலையை அதிகரிப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

சில விற்பனையாளர்கள் மரக்கறிகளை விலையைக் காட்டாமல் விற்பனை செய்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் விலையை காட்டாமல் விற்பனை செய்வது தொடர்பில் உரிய அரச நிறுவனம் ஏன் செயற்படவில்லை என்பது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென சில வர்த்தகர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post