பாணந்துறை-ரதுவத்த பிரதேசத்தில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பல வருடங்களாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து இரண்டு கைபேசிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வலான பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment