டி.கே.ஜி.கபில
ஓமானுக்கு பணிப்பெண்களாக சென்று, வீட்டின் உரிமையாளர்களால் பாலியல் தொல்லை, தாக்குதல், சம்பளம் வழங்காமை உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளுக்கு முகங்கொடுத்திருந்த இலங்கையர் 16 பேர் நேற்று (02) நாடு திரும்பியுள்ளனர்.
ஓமானின் இலங்கைத் தூதரகக் காரியாலயத்தில் உள்ள சுரக்ஷா மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னரே நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் டுபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் பின்னர் ஓமானுக்கு இவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் ஓமானில் வீட்டு வேலைகளுக்காக சேர்த்துகொள்ளப்பட்ட இவர்கள், பணிப்புரிந்த வீட்டின் உரிமையாளர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, பதுளை, கண்டி, குருநாகல், சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான மேலும் 26 பணிப்பெண்கள் ஓமானின் சுரக்ஷா மத்திய நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இம்மாத இறுதியில் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
Post a Comment