2/3க்காக தலைசாய்த்து கொண்டிருக்க முடியாது - திலும் அமுனுகம
January 05, 2022
0
மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும் என்பதற்காக, கூறும் எல்லா விடயங்களுக்கும் தலையை சாய்துகொண்டிருக்க முடியாதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் எடுக்கப்படும் கூட்டுத் தீர்மானங்களுக்கு இணங்கிவிட்டு வெளியில் சென்று அத்தீர்மானங்களை விமர்சிக்கிறவர்கள், அமைச்சரவையில் இருப்பதற்குப் பொறுத்த மற்றவர்கள் என்றார்.
ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு இணங்கிவிட்டு வெளியில் சென்று ஊடகங்கள் முன்பாக அவற்றை விமர்சிப்பது தவறு. அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளில் அரசாங்கத்தின் உறுப்பினராக இருந்துவிட்டு, மோசமான செயற்பாடுகளின்போது எதிர்க்கட்சியினராக மாறிவிடுவதாகவும் தெரிவித்தார்.
Share to other apps