Top News

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 25.5 பில்லியன் ரூபாய் நன்கொடை கிடைத்தது.

 


சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் இலங்கை விஜயத்தின் போது, ​​இலங்கைக்கு நிதிப் பங்களிப்பை வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பங்களிக்க ஒப்புக்கொண்டார்.


இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு 25.5 பில்லியன் ரூபா நிதி நன்கொடை உட்பட நான்கு திட்டங்களை முன்னெடுக்க சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இணங்கியுள்ளார்.


BMICH புனர்நிர்மானம், சிறுநீரக நோயாளர்களைக் கண்டறிவதற்கான உபகரணங்களுடன் கூடிய நோயாளர் காவு வண்டிகளை வழங்குதல், கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1996 வீட்டுப் தொகுதிகளை நிர்மாணித்தல் ஆகியன குறித்த ஒப்பந்தங்களில் உள்ளடங்குவதாக அந்த ட்விட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post