இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 87 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய 2019ஆம் ஆண்டு நாட்டில் 31 ஆயிரத்து 162 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு குறைவடைந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment