நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று!

ADMIN
0



நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று (13) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் நோக்கில் இந்த ஒத்திகை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்கு அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top