போலி கையொப்பத்தின் ஊடாக தயாரிக்கப்பட்ட ATM கார்ட்டை பயன்படுத்தி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் சம்பளம் வைப்பிலிடப்படும் கணக்கிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபாவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய உதித்த லொக்கு பண்டார மோசடி செய்துள்ளதாக அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸவின் வங்கி கணக்கிலுள்ள பணம் குறைவடைந்து வருகின்றமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட நாட்களாக சூட்சமமாக முறையில் இந்த பண மோசடி இடம்பெற்று வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஸ தோல்வி அடைந்த நிலையில், உதித்த லொக்கு பண்டார, மஹிந்த ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
Post a Comment