10 கிலோ கிராம் சம்பா அரிசி உள்ளிட்ட 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 3,998 ரூபாவுக்கு சதொச நிறுவனங்கள் ஊடாக பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.