எமது நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் எக்ஸிம் வங்கியின் மூலம் சலுகைக் கடன் வசதியளிப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிதி ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்கீழ் கொஹூவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த கருத்திட்டங்களுக்கு அப்பால் தேசிய வீதி வலையமைப்பில் முத்தெட்டுகல புகையிரதக் கடவை மற்றும் ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி, நீர்கொழும்பு மாரிஸ்டெலா சந்தி மற்றும் தலவத்துகொட சந்தி போன்ற இடங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு வழங்குவதற்காக குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த இடங்களில் மேம்பாலங்கள் 04 இனை அமைப்பதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Post a Comment