Top News

தனியார்துறையினருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவது குறித்து ஆராய்வு


தனியார்துறையில் கடமையாற்றி வரும் ஊழியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.






வாழ்க்கைச் செலவு பிரச்சினை அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார்துறையினரையும் பாதிக்கும் என்ற காரணத்தினால் 5000 ரூபா கொடுப்பனவு அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.




இந்த விவகாரம் தொடர்பில் தொழில் தருனர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.




இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 7ம், 10ம் மற்றும் 11ம் திகதிகளில் தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.




ஆடைத்தொழிற்சாலைகள், பெருந்தோட்டத்துறை, சிறிய மற்றும் நடுத்தர முயற்சியான்மையாளர்கள், கடைகள் காரியாலய சட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் துறையைச் சேர்ந்த தொழில் தருனர்களுடனும் இந்த 5000 ரூபா கொடுப்பனவு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post