நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி வருவாய் சரிவு, கட்டண உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, மூலப்பொருட்கள் இறக்குமதி மற்றும் செலவுகள் அதிகரிப்பு மற்றும் வங்கிகள் அறவிடும் அதிக வட்டி வீதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
Post a Comment