Top News

வடக்கு ரயில் பாதை 6 மாதங்களுக்கு மூடப்படும் – ரயில்வே திணைக்களம்

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 120 கிலோமீற்றர் பகுதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த ரயில் பாதையில் ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன.

மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்ததன் பின்னர் ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post