நாட்டு மக்களின் கைகளில் பணங்கள் இருந்தாலும், வாங்குவதற்கு பொருள்கள் இல்லை என தெரிவித்த விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த, பெசிலின் 7ஆவது மூளை தற்போது தான் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் கேலி செய்துள்ளார்.
ஒரு மாதத்துக்கு முன்புதான் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். இவ்வாறான நிலையில் தற்போது பெசில் நாட்டு மக்களுக்கு பணங்களை வழங்கி வருகிறார். பெசிலின் 7ஆவதுமூளைக்கு தற்போதுதான் நாட்டு மக்களுக்கு பணங்களை வழங்க வேண்டும் என நினைவு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் இன்னும் ஒருவருடத்துக்கு ஆட்சியில் நீடித்தாலும் நாட்டின் சொத்துக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விடும் என்றார்.
Post a Comment