Top News

AC எரிவாயு குழாய் வெடித்ததில், மொஹமட் ஹிசாம் வபாத்






- நதீக தயாபண்டார, சேஹ்ன் செனவிரத்ன -


கண்டி- இரண்டாம் இராஜசிங்க மாவத்தையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வளிசீராக்கி( ஏசி) இயந்திரம் ஒன்று பழுதுபார்க்கப்படும் போது, அதிலிருந்த எரிவாயு குழாய் வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதனை பழுதுபார்த்த பராமரிப்பு தொழிநுட்பவியலாளரான 24 வயதுடைய மொஹமட் ஹிசாம் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான அவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post