Top News

ப்(b)லீவ் ஸ்டார் தொடரில் அக்கரைப்பற்று டீன் ஸ்டார் வெற்றி...!





- ஊடப் பிரிவு -


இன்று (2022.01.01) சம்மாந்துறை ப்(b)லீவ் ஸ்டார்  விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மென்பந்து சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று டீன் ஸ்டார் வெற்றிவாகை சூடினர்.


சுமார் 15 அணிகள் கலந்து கொண்ட இத் தொடரில் அனைத்து அணிகளும் சம பலம் கொண்டவைகளாகவே காணப்பட்டன. மேலும் திறமைகள், நுனுக்கங்கள் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அக்கரைப்பற்று டீன் ஸ்டார் மற்றும் சம்மாந்துறை செல்ரிக் அணியினர் இறுதி பலப் பரீட்சையை மேற்கொண்டனர். இறுதியில் அக்கரைப்பற்று டீன் ஸ்டார் அணியினர் வெற்றி பெற்றனர்.




இத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் முஹம்மட் அப்fனான் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டதோடு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார். அக்கரைப்பற்று டீன் ஸ்டார் அணிக்கும் சம்மாந்துறை செல்ரிக் அணிக்கும் இந்த போட்டியை நேர்தியாக ஏற்பாடு செய்த ப்(b)லீவ் ஸ்டார் அணிக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டினையும் பகிர்ந்து கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post