சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். உறுதிமொழி மலையை மக்களிடம் கொடுத்து
ஆட்சிப்பீடமேறிய அரசாங்கம், தமக்கு வாக்குகளை வழங்கிய 69 இலட்சம் மக்கள் உள்ளிட்ட முழு மக்களையும் குழிக்குள் தள்ளிவிட்டது என்றார். தனமல்வில பௌதாகம மகா வித்தியாலயத்துக்கு கனிணிகளை கையளித்துவிட்டு அங்கு உரையாற்றும்
போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
“கொரோனா தொற்றினால், பல்வேறான சவால்களுக்கு நாங்கள் முகங்கொடுத்தாலும்
எதிர்க்கட்சி என்றவகையில் பல்வேறான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். சீர்குலைந்திருக்கும் கல்வியை கட்டியெழுப்புவதற்கும்
பலமிக்க மாணவர் சமூதாயத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் இன்று இந்த
வேலைத்திட்டங்களை செய்துக்கொண்டிருக்கின்றோம் என்றார்.