Top News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருநாகல் பகுதி திறந்து வைப்பு

 




மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இந்தப் பகுதி 41 கிலோமீட்டர் தூரங்கொண்டதாகும். இது ஐந்து இடைமாறல் பகுதிகளைக் உள்ளடக்கியதாகும் 


மீரிகம, நாக்கலாகமுவ, தம்பொக்க, குருணாகல், யக்கஹபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


சுற்றாடல், சமூக ரீதியான பாதிப்புகளை குறைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். நான்கு ஒழுங்கைகளை கொண்டதாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 4 பில்லியன் ரூபா செலவில் நெடுஞ்சாலையின் இந்தப் பகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 


நான்கு வருடங்களுக்குள் இந்த நெடுஞ்சாலைகளின் பணிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post