Top News

கர்தினாலின் கருத்துக்கு கமல் குணரத்ன பதிலடி






பொரளையிலுள்ள தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

விசாரணைகள் தொடர்பில் சி.ஐ.டிக்கு நல்ல அறிவு உள்ளது என்றும்
கர்தினால் நினைத்ததைத் தாண்டி அதிகாரிகள் முறையான விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிப்பதாகத் தெரிவித்த அவர், விசாரணையை முடிக்க குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்.

24 மணி நேரத்துக்குள் கைது செய்ய முடியும் என்றால்
இது ஒரு அதிசயமாக இருக்க வேண்டும் என்றார்.


Post a Comment

Previous Post Next Post