நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பியகமவில் உள்ள தொழிற்சாலையொன்றில் பணம் அச்சடித்து வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
தேவையான அளவுக்கு ரூபாவை அச்சடிக்க முடியுமென குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, டொலர்களை அச்சடிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை தற்போது வேறு பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இன்மையே இதற்கான பிரதான காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.