ஜனாதிபதி இரகசியமாக விசாரணை செய்கிறார்.
January 06, 2022
0
காஸ் வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இச்சம்பவங்கள் தொடர்பில் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காஸ் சிலிண்டர்களை பயன்படுத்த மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் இப்பிரச்சினைகள் சில வாரங்களுக்குள் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த புத்தாண்டில் நடைமுறைச்சாத்தியமாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். கோவிட் தொற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதனால், பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றார்.
Share to other apps