சமுர்த்தி, கிராமிய மற்றும் சனச வங்கிகளில் ஒரு கோடியே 73 இலட்சத்திற்கும் அதிக பணம் மற்றும் 9 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை பொலிஸாரினால் இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் பத்தேகம, பிடிகல, எல்பிட்டிய மற்றும் தெலிகட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய மீவெட்டும – பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
காலி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment