Top News

மரக்கறி விலையில் வீழ்ச்சி!


நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கிய அவர், பண்டிகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கொள்வனவு விலையும் குறைந்துள்ளதாகவும், மற்றும் சிறிய இலாபத்தை வைத்துக்கொண்டு மொத்த விற்பனை விலையும் ஒரே நேரத்தில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் 1 கிலோ முட்டைகோஸ் 165 ரூபாவாகவும், 1 கிலோ கெரட்  295 ரூபாவாகவும், 1 கிலோ வெண்டைக்காய் 165 ரூபாவாகவும், 1 கிலோ முள்ளங்கி 85 ரூபாவாகவும்,1 கிலோ பீட்ரூட் 195 ரூபாவாகவும், மற்றும் 1 கிலோ உருளைக்கிழங்கு 260 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.


முறையே 1 கிலோ பீன்ஸ் 270 ரூபாய், 1 கிலோ குடைமிளகாய் 1,300 ரூபாய், 1 கிலோ ப்ரோக்கோலி 2,300 ரூபாய், 1 கிலோ சிவப்பு முள்ளங்கி 1,200 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post