பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அளவிற்கு தனக்கு
அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு கிடைத்துள்ள ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் அரசாங்கம் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான கதைகளை நாட்டின் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக் கொள்வது நியாயமானது அல்ல என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி
, புதிய பிரதமராக பசில் ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment