மின்வெட்டு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
January 10, 2022
0
மின்வெட்டு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
மின்சாரம், எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்ட விடயங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மின்சார விநியோகம் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்ததன் பின்னர், அதன் தீர்மானத்தைப் பிற்பகல் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share to other apps