பால் விவசாயிகளுக்கான பால் விலையினை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மில்கோ நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment