பாடசாலை தொடர்பில் வெளியான தகவல்

ADMIN
0




நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து, முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவரத்னவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. தொற்றின் வேகம் குறைந்ததை அடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டிருந்தன.

எனினும், வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் அளவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு முன்பை போல கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top