ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் கணவர் மற்றும் மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் பல நண்பர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எம்.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும், அவர் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment