Top News

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு –அன்வர் ஹம்தானி!




இலங்கையில் கடந்த காலத்தை விட ஒட்சிசன் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக கொரோனா தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 15 ஆயிரம் படுக்கைகளில் உள்ளன.


கடந்த நாள்களை விட தற்போது கொரோனா தொற்றாகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் 100 க்கு 30 சதவீதமான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அந்தவகையில் 70 தீவிர சிகிச்சை படுக்கைகளில் 52 படுக்கைகளில் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாகத் தெரியவந்துள்ளது.


இதேநேரம் ஒட்சிசன் தேவையுடைய சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.


அத்துடன் வெற்றிகரமான கொரோனா தடுப்பூசி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்பட்டால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post