மத்திய அதிவேக வீதியில் அறவிடப்படும் கட்டணங்கள் குறித்த அறிவிப்பு!

ADMIN
0

 




மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி நேற்று திறக்கப்பட்டதோடு போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இன்று மதியம் 12 மணிவரையில் குறித்த வீதியில் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.


இதனை தொடர்ந்து குறித்த அதிவேக வீதியைப் பயன்படுத்தும்போது அறவிடப்படும் கட்டணங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய சிறிய வாகனங்கள் இரண்டு பரிமாற்று நிலையங்களுக்கு இடையில் பயணிக்கும்போது 100 ரூபாவும், பெரிய வாகனங்கள் பயணிக்கும்போது 150 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தவிர மீரிகம முதல் குருநாகல் வரையில் பயணிக்கும் சிறிய வாகனங்களுக்கு 250 ரூபா கட்டணம் அறவிடப்படும் அதேவேளை பெரிய ரக வாகனங்களுக்கு 350 ரூபா முதல் 550 ரூபா வரை அறிவிடப்படும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top