Top News

இலங்கையில் இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு : மீண்டும் நாடு முடக்கத்திற்கு செல்லாமலிருக்க சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவும்



(எம்.மனோசித்ரா)


நாட்டில் கொழும்பு, கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே இந்த அச்சுறுத்தல் தொடர்பில் உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இதுவரையில் 48 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இனங்காணப்படும் ஒமிக்ரோன் தொற்றாளர்களுக்கும் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை பின்பற்றப்படலாம்.


கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.


இதுவரையில் இனங்காணப்பட்டுள்ள 48 ஒமிக்ரோன் தொற்றாளர்களில் பெருமளவானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர். இதே போன்று அனுராதபுரம் மாவட்டத்திலும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


ஒமிக்ரோன் பிறழ்வினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும். மீண்டும் நாடு முடக்கத்திற்கு செல்லாமலிருப்பதற்கு சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post