நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா, மொடர்னா, ஸ்புட்னிக், சைனோபார்ம் மற்றும் பைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48,560,424 ஆக பதிவாகியுள்ளது என அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொள்வனவு செய்யப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியினதும் விலை 5 முதல் 7.5 அமெரிக்க டொலர்களாகும் என வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.