கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முற்பட்ட வேளையில், சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து பேரும் கொழும்பை சேர்ந்தவர்களாகும். இவர்களில் பெண்கள் மூவரும் ஆண் ஒருவரும் அடங்குவதாக சுங்கப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
இந்த வெளிநாட்டு நாணங்களில் 22300 அமெரிக்க டொலர்களும், 63500 யூரோவும், 292000 சவுதி ரியால், 8725 ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் 75000 டிராம் காணப்பட்டதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த குழுவினர் மீது ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய, அவர்களினால் கொண்டு செல்லப்பட்ட பயணப்பையை சோதனையிட்ட போது அதற்கு சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் அதனை கடத்திய கடத்தல்காரர்கள் தொடர்பில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Post a Comment