பேருவளையில் ஒமிக்ரொன் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ,பேருவளை சீனக் கோட்டையைச் சேர்ந்த 30 வயதுடைய மாணிக்கக்கல் வியாபாரி ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர் முதித அமரசிங்க தெரிவித்துள்ளாா்.
மேலும் வெளிநாடு செல்லும் நோக்கில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.