Top News

சிக்கனமாக குழாய் நீரை பயன்படுத்தவும்



நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருவதால், குழாய் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நுகர்வோரை அறிவுறுத்தியுள்ளது.

குடிநீருக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மலைப் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழையின்றிய வரட்சியான காலநிலையின் காரணமாகவே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதன் காரணத்தில் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நீரை வழங்க முடியாமை மற்றும் நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்பிறப்பாக்கிகளின் செயலிழப்பினால் இலங்கையின் மின் நெருக்கடியும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post