Top News

பேருந்து கட்டண விலைகளில் மாற்றம்!


நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள பஸ் பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


இதன்படி பஸ் பயணக்கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது.


அதற்கமைய ஆரம்ப கட்டமாக, பஸ் பயண கட்டணங்கள் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இத்துடன் , ஏனைய பஸ் பயணக்கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post