வவுனியாவில் காஸ் அடுப்பு வெடிப்பு!
January 03, 2022
0
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது காஸ் அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி, மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது இன்று (03.01) மதியம் திடீரென காஸ் அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளார். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Share to other apps