Headlines
Loading...
நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் காரணமாக, எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்.

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் காரணமாக, எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்.




(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் , மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளினால்எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொவிட் அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


தடுப்பூசி பெற்றுக் கொள்ளல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றின் மூலமாகவே இந்த அபாயத்திலிருந்து மீள முடியும்.


முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் , மேற்கூறப்பட்ட அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அத்தியாவசிய மானதாகும். இதன் மூலமே எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.


ஒமிக்ரோன் பிறழ்வானது டெல்டாவை விட வீரியம் குறைவானதாகக் காணப்பட்டாலும் , வேகமாக பரவும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிக்கும் போது வைத்தியசாலை கட்டமைப்புக்களும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். வைத்தியசாலை ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகி அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால் மருத்துவ சேவையும் மந்தமடையும்.

0 Comments: